தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்

வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

 

ஊற்றும் ஐயா உம் வல்லமையை

தாகத்தோடு காத்திருக்கிறேன் –

 

11.

மாம்சமான யாவர் மேலும் ஊற்ற வேண்டுமே

மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே –     ஊற்றும்

 

2.

முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே

கனவுகள் காட்சிகள் காண வேண்டுமே     –     ஊற்றும்

 

3.

நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல‌

நித்தமும் தவறாமல் கனி தர வேண்டும்  –     ஊற்றும்

 

4.

புதிய கூர்மையான கருவியாகணும்

பூமியெங்கும் சுவை தரும் உப்பாகணும்    –     ஊற்றும்

 

5.

கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்

சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் –     ஊற்றும்

 

6

.வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்

வயல்வெளி அடர்ந்த காடாகணும்     –     ஊற்றும்

 

7.

நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே

நல்வாழ்வும் நம்பிக்கையும் வளர வேண்டுமே  –     ஊற்றும்

 

8.

தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்

எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் –     ஊற்றும்

 



thakamullavan mel dhannirai uurruven enrir

varanta nilaththil aarukalai uurruven enrir

 

uurrum aiya um vallamaiyai

thakaththodu kaththirukkiren –

 

11.

mamchamana yavar melum uurra vendume

makkalellam iraivakku uraikka vendume –     uurrum

 

2.

muthiyor melum ilainjar melum uurra vendume

kanavukal kadsikal kana vendume     –     uurrum

 

3.

nirodai arukilulla marangkalaib bola‌

nithdhamum dhavaramal kani dhara vendum  –     uurrum

 

4.

buthiya kurmaiyana karuviyakanum

bumiyengkum suvai dharum ubbakanum    –     uurrum

 

5.

kallana idhayaththai eduththita vendum

chathaiyana idhayaththaib boruththita vendum –     uurrum

 

6

.vananthdharam sezibbana thodtamakanum

vayalveli atarnthdha kadakanum     –     uurrum

 

7.

nithiyum nermaiyum dhazaikka vendume

nalvazvum nambikkaiyum valara vendume  –     uurrum

 

8.

thuya nirai engkal mel theliththita vendum

ellavidha asuthdhangkal ningkita vendum –     uurrum